சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் திடீரென தீக்குளித்தார். தீயில் கருகி துடித்த அவரை பேரணியில் கலந்து கொண்டவர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அதன் பின்னர் அவர் குச்சி ஐஸை வாங்கி சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.அந்த வினோத நபரின் பெயர் மோஷே
சில்மான். 57 வயதாகும் இவர் டெல் அவிவ் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார். அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி இப்பேரணி நடந்தது.
பேரணியின்போது திடீரென தீக்குளித்து விட்டார் மோஷே. தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அவர் மீது தண்ணீரை ஊற்றி உட்கார வைத்தனர். பின்னர் அவருக்கு குச்சி ஐஸைக் கொடுத்தனர். அதை வாங்கி நிதானமாக சாப்பிட்டார் மோஷே.
அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், 80 சதவீத அளவுக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக கூறினர். இதனால் தற்போது ஆபத்தான நிலையில் மோஷே சிகிச்சை பெற்று வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக