இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினருக்கு தேவையான சரக்குப் பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான் அரசு மீண்டும் சாலைப் போக்குவரத்து வழியை திறந்த நடவடிக்கைகையை கண்டித்து நேற்று வடமேற்கு மாகாணமான வஸீரிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.கடந்த ஆண்டு 24 பாக். ராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலுக்கு பலியானார்கள். இதனைத் தொடர்ந்து
ஆப்கானில் உள்ள நேட்டோ படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல உதவு பாகிஸ்தானில் உள்ள சாலை வழி மூடப்பட்டது.
அண்மையில் அமெரிக்கா மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து சாலை திறக்கப்பட்டது. ஆனால், ட்ரோன் தாக்குதல்கள் மூலமாக நிரபராதிகளை கொன்றொழிக்கும் அமெரிக்காவின் திமிரின் முன்னால் பாகிஸ்தான் அரசு மண்டியிட்டுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர் அமெரிக்கா எதிர்ப்பு முழக்கங்களை முழங்கினர். பாகிஸ்தான் அரசு, மேற்கத்திய ஆதரவு நடவடிக்கைகளில் இருந்து வாபஸ் பெறவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அமெரிக்க ஆதரவு அணுகுமுறையை கைவிடாவிட்டால் நேட்டோவிற்கான பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை தடுப்போம் என்றும், போராட்டத்தை இன்னமும் தீவிரப்படுத்துவோம் எனவும் அறிவித்துள்ளனர்.
நேட்டோ படையினருக்கு சரக்கு போக்குவரத்து சாலையை திறந்துவிட்ட பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் மக்கள் திரள் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக