
நான்காவது நாளாக டமாஸ்கஸில் சிரியா ராணுவத்திற்கும், ஃப்ரீ சிரியா ஆர்மிக்கும் இடையே கடுமையான மோதல் நடைப்பெற்று வருகிறது.
பிரிட்டனை மையமாக கொண்ட சிரியன் அப்ஸர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸை மேற்கோள்காட்டி, டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளில் குண்டுச்சத்தம் கேட்டதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
சிரியன் அப்ஸர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் மேலும் கூறுகையில், கடந்த 48 மணிநேரத்தில் 60 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது.
ஃப்ரீ சிரியா ஆர்மியின் செய்தி தொடர்பாளர் கர்னல் கஸ்ஸாம் ஸாஅத்யத்தீன் கூறுகையில், ‘வெற்றி நெருங்கி விட்டது’ என தெரிவித்துள்ளார். ‘ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்’ என ஸாஅத்யத்தீன் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக