சென்னை:ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு படகில் திரும்பும் வேளையில் அமெரிக்க கப்பற்படையால் அநியாயமாக தமிழகத்தைச் சார்ந்த ஏ.சேகர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பம் நடந்தேறியது. இதில் இதர 3 தமிழகத்தைச் சார்ந்தவர்களும் காயமடைந்தனர்.அமெரிக்க கப்பற்படையினர் எச்சரிக்கை விடுக்காமலேயே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அடாவடித்தனத்தை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி
சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
நாளை(வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை மெளண்ட் ரோடு ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என எஸ்.டி.பி.ஐ அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக