லக்னோ:வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாயிகளிடமிருந்து பலம் பிரயோகித்து நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். நிலத்தை கையகப்படுத்தினால் அதற்கு உரிய இழப்பீடும், தேவை ஏற்பட்டால் வேலையும் அளிக்கவேண்டும். விவசாயிகளின் அனுமதியுடன் மட்டுமே நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று அகிலேஷ் யாதவ்
கூறியுள்ளார்.
டெல்லியையும், லக்னோவையும் இணைக்கும் சாலையை நிர்மாணிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் சம்மதித்தால் மட்டுமே இத்திட்டத்தில் அடுத்த நடவடிக்கை உருவாகும் என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக