புதுடெல்லி:மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் கைதிகளிடம் போலீஸ் பாரபட்சமாக நடந்துகொள்வது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்த மஹராஷ்ட்ரா மாநில அரசுக்கும், உள்துறை அமைச்சருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பத்திரிகைச் செய்தியில் இத்தகவலை
வெளியிட்டுள்ளது.
அண்மையில் டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸ் நடத்திய ஆய்வில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம் கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடவேண்டும் என முஸ்லிம் லீக் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் கோரிக்கை விடுத்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக