வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

இஸ்ரேலுக்கு கடிதம்:முர்ஸி அலுவலகம் மறுப்பு . . .

Egypt denies Mursi letter sent to Israelகெய்ரோ:மேற்காசியாவில் சமாதானத்திற்காக பாடுபடக் கோரி எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி, இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸிற்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான செய்தியை முர்ஸியில் அலுவலகம் மறுத்துள்ளது. மேற்காசியாவில் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்க கோரி முர்ஸி, பெரஸிற்கு கடிதம் எழுதியதாக
எ.எஃப்.பி செய்தி வெளியிட்டது.
கடிதத்தில் அடங்கியுள்ள அனைத்து விபரங்களையும் எ.எஃப்.பி வெளியிட்டிருந்தது. இஸ்ரேல் உள்பட பிராந்தியத்தில் மக்களின் பாதுகாப்பையும், ஸ்திரத் தன்மையையும் உறுதிச்செய்யும் விதமாக இணைந்து செயல்படுவது அத்தியாவசியம் என முர்ஸி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முர்ஸியின் கடிதம் ஆக்கப்பூர்வமானது என்றும், ஆனால் இரு நாடுகளிடையேயான உறவில் இதன் மூலம் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் எ.எஃப்.பியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இக்கடிதத்தை முர்ஸியின் அலுவலகம் மறுத்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா நேற்று முன்தினம் முர்ஸியுடன் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார். எகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் உறவு சிறந்த ரீதியில் தொடரவேண்டும் என்று பனேட்டா, முர்ஸியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக