டெல்லி: நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் தமது சொந்த கிராமமான அம்ராவதிக்கு எடுத்துச் சென்றதுதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.அவர் தமது பதவிக்காலத்தில் இருந்த போது 150 பரிசுப் பொருட்களை பெற்றிருக்கிறார். அதில் அமிர்தசரஸ் தங்கக் கோயில் பொறிக்கப்பட்ட தங்கத் தட்டு ஒன்றும்
அடக்கம். அதில் அமெரிக்க அதிபர் ஒபாமா கொடுத்தது. அம்ராவதியில் இருக்கும் அனைத்து பொருட்களும் பிரதீபா குடும்பத்தினர் நடத்தும் வித்யாபார்தி கல்லூரியில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. அனேகமாக இந்த அருங்காட்சியகம் வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படலாம்.
பிரதீபா பட்டீலின் இந்த நடவடிக்கையானது மரபுகளை மீறிய செயல் என்றுதான் அரசியசட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருப்பவருக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் நாட்டுக்குச் சொந்தமானது... அது நாட்டின் சொத்து என்றுதான் கருதப்பட வேண்டும் என்கிறார் அரசியல்சட்ட வல்லுநர் சுஸ்காப் காஷ்யப்.
குடியரசுத் தலைவர் பதவி காலத்துக்கு பின் பிரதீபா குடியேறுவதற்காக ராணுவ நிலத்தை அபகரித்ததாக முன்னர் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் வேறுவழியின்றி அதை ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பிரதீபா பட்டீல்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக