பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தசோகையை சரிப்படு த்தும்.பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. பசியைத்தூண்டும். சர்க்கரை நோயின் கடுமையைக் குறைக்கும்.முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண் டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும்.
சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. வயிற்றில் உள்ள புழுக்கள் கொல்லப்படும்.
வெண்டைக்காய்: ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. நினைவாற்றலைப் பெருக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலை நீக்கும்.
கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம் ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூலநோய் போன்றவை நீங்கும்.
கேரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் சோர்வை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வைத் தூண்டும்.
சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் சோர்வை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வைத் தூண்டும்.
குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச் சத்து ஆகியன கணிசமாக உள்ளன. அஜீரணக்கோள £றை நீக்கி செரிமான சக்தியைத் தூண்டும்.
கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக