கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத கடும் வெள்ளப்பெருக்கில் தாய்லாந்து சிக்கித் தவித்துத் தத்தளித்து வருகிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான டான் முஆங் விமானநிலையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி நீர் உட்புகுந்துவிட்டதால் கடும் பாதிப்புக்குள்ளானது. பயணியர் விமானங்கள், சரக்கு விமானங்கள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மற்றொரு பன்னாட்டு விமான நிலையமான ‘சுவர்ணபூமி’ விமான நிலையம் இதுவரை பாதிப்படையவில்லை.
உள்ளூர் விமான நிலையமான டான் முஆங் விமானநிலையத்திலும் ஓடுதளங்கள் பாதிப்படையவில்லை என்ற போதிலும், கட்டணக் குறைவு சேவை நிறுவனமான நோக் ஏர் மற்றும் ஓரியண்ட் தாய் ஏர்வேய்ஸ் என்ற இரண்டு விமான நிறுவனங்களும், தங்களது விமானங்களை பன்னாட்டு தளமான ‘சுவர்ணபூமி’க்குத் திருப்பி விட்டுள்ளன. இன்னும் ஒருவார காலத்துக்கு இந்நிலை நீடிக்கும் என்று தெரிகிறது
இந்நிலையில், பிரதமர் யுங்லக் ஷினாவத்ரா, அக்டோபர் 27 முதல் 31 வரை நாட்டில் பொதுவிடுமுறை அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக