வியாழன், அக்டோபர் 20, 2011

தனிமைச் சிறையை தடைச்செய்ய வேண்டும் – ஐ.நா

ஐ.நா:நீண்டகாலமாக தனிமைச் சிறையில் அடைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என சித்திரவதைகளைக் குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா குழு தெரிவித்துள்ளது.
தனிமைச்சிறை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் சிறைக் கைதிகளுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என விசாரணைக் குழுவிற்கு தலைமை வகித்துள்ள ஜுவான் மென்ட்ஸ் ஐ.நா சபையின் மனித உரிமை கவுன்சிலில் தெரிவித்துள்ளார்
.
சிறைக் கைதிகளுக்கு மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் சித்திரவதை முறைகளை பயன்படுத்தக்கூடாது. சிறைக் கைதியின் பாதுகாப்பிற்கு தனிமைச்சிறை தேவை என்றாலும் 15 தினங்களுக்கு மேலான தனிமைச் சிறைக்கு தடை விதிக்க வேண்டும்.
பல நாடுகளும் சிறைக் கைதிகளை தனிமைச் சிறையில் அடைத்துள்ளனர். குறைந்த நாட்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களிடம் நடத்திய ஆய்வில் மனோரீதியாக-உடல்ரீதியாக பிரச்சனைகளை கண்டறிந்ததாக வாஷிங்டனில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியரான மென்ட்ஸ் கூறுகிறார்.
அமெரிக்காவில் 25 ஆயிரம் பேர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சீன அரசு அரசு ரகசியங்களை வெளிநாட்டினருக்கு கசியச்செய்த அளித்த வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பெண்ணை இரண்டு ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்துள்ளது என மென்ட்ஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக