வியாழன், அக்டோபர் 27, 2011

ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள்

TH14_MORADABAD__753669f
முராதாபாத்:கடந்த ஜூலை மாதம் உ.பி மாநிலம் முராதாபாத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து போலீஸாரால் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம் சிறுவர்கள் நீதி கிடைக்காமல் 4 மாதங்களாக சிறையில் வாடுகின்றனர்.செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இச்சிறுவர்களுக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை. கலவரத்தை நடத்துதல், கொலை முயற்சி ஆகிய குற்றங்கள் இந்த அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் சுமத்தியுள்ளது.

அப்பாவி முஸ்லிம் சிறுவர்கள் மீது கடுமையான குற்றங்களை சுமத்தியதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நான்கு மாதங்களாக பள்ளிக்கூட மாணவர்களான முஸ்லிம் சிறுவர்களை சிறையில் அடைத்ததற்கு காரணம் தெரிவிக்க கோரி தேசிய மனித உரிமை கமிஷன் முராதாபாத் சீனியர் போலீஸ் சூப்பிரண்டிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறுவர்கள் குற்ற வழக்குகளில் கைதுச்செய்யப்பட்டால் ஜுவைனல்(சிறுவர்கள் சீர்திருத்த) நீதிமன்றம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படவேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் முஸ்லிம் சிறுவர்களை பொய் குற்றம் சாட்டி போலீஸ் சிறையில் அடைத்துள்ளது.
முராதாபாத்தில் அஸாலத்பாகில் ரெய்டு நடத்தும் வேளையில் புனித திருக்குர்ஆனை அவமதித்த போலீஸை எதிர்த்து வீதிகளில் இறங்கிய போராட்டம் நடத்திய முஸ்லிம்களுக்கும் போலீசுக்கும் இடையே ஜூலை மாதம் 3-ஆம் தேதி நடந்த மோதலில் சிறுவர்களை கைதுச்செய்தது போலீஸ்.இதர 35 நபர்களும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் என கைதுச்செய்யப்பட்டவர்கள் மீது கலவர குற்றம் சாட்டி நான்கு தடவை போலீஸ் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சிறுவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச்செய்யக்கூடாது என்ற சட்டத்தையும் போலீஸ் கடைப்பிடிக்கவில்லை.
சம்பவம் நிகழ்ந்த அன்று பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய வேளையில் மோதல் நடந்ததால் அவர்கள் வீட்டிற்கு செல்லமுடியாத சூழலில் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கலவரத்தை தூண்ட முயன்றார்கள் என குற்றம் சாட்டிய போலீஸ் இந்த அப்பாவி முஸ்லிம் சிறுவர்களை கைதுச்செய்து சிறையில் தள்ளியுள்ளது. இவர்கள் சிறுவர்கள் அல்லர் வயதில் மூத்தவர்கள் என்பது போலீசாரின் வாதமாகும்.
ஆனால் பள்ளிக்கூட பதிவேடுகளில் இரு முஸ்லிம் சிறுவர்களுக்கு 14 வயதும், மற்ற இரு முஸ்லிம் சிறுவர்களின் வயது 15 ஆகும்.இது போலீசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக வீடியோ காட்சி பதிவுச்செய்துள்ளதாக கூறும் போலீஸ் அதனை இதுவரை வெளியிடவில்லை.
பாலியல் வன்புணர்வு, கொலை ஆகிய குற்றங்களை செய்யாத சிறுவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச்செய்யக்கூடாது என்பது சட்டமாகும். சிறுவர்களின் வயதை மதிப்பிட பள்ளிக்கூட சான்றிதழை அளவுகோலாக கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் போலீஸாருக்கு எதிராக அமையும். சிறுவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும் கூட அவர்களை சிறைகளில் அடைக்கக்கூடாது எனவும் போலீஸ் ஸ்டேசன்களில் சிறுவர் நல அதிகாரிகளை நியமிக்கவேண்டும் எனவும் அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக