திங்கள், ஏப்ரல் 30, 2012

தம்புள்ளை மஸ்ஜிதை அகற்ற முடியாது: அமைச்சர் ரவூஃப் ஹக்கீம்

Dambulla Mosque Cannot Be Relocated – SLMC rauf hakeemகொழும்பு:தம்புள்ளை மஸ்ஜிதை அகற்ற முடியாது என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், இலங்கை அரசு அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இலங்கை தம்புள்ளை பகுதியில் 60 ஆண்டுகளாக நிலைப்பெற்றிருக்கும் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான மஸ்ஜித் மீது தாக்குதல் நடத்திய வெறிப்பிடித்த புத்த பிக்குகள் அதனை இடிக்க கோரி
வருகின்றனர். இதற்கு இலங்கை இனவாத அரசும் ஒப்புக்கொள்ளும் வகையில் 6 மாதத்திற்குள் மஸ்ஜித் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று இலங்கை அரசின் பிரதமர் அறிவித்துள்ளார். இது உலக முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ தலைவர் ரவூஃப் ஹக்கீம் கூறியது: போராட்டம் பரவி வருவதை நாங்கள் பார்க்கின்றோம். தயவுசெய்து அமைதி காக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரம் மிக்க ஒரு புத்தத் துறவி திடீரென ஏப்ரல் 20-ம் தேதி மஸ்ஜிதுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். அவர் மஸ்ஜிதை இடம் மாற்ற வேண்டுமெனக் கோரினார். ஏனெனில், அது புத்தர்களின் புனித இடமாக அறிவிக்கப்பட்ட பகுதி என்பதால் மஸ்ஜிதை மாற்றக் கோரினார்கள். எங்களது கொள்கை முடிவெடுக்கும் கமிட்டி வெள்ளிக்கிழமை கூடியது.
அப்போது மஸ்ஜிதை விவகாரம் குறித்து விவாதித்தோம். நாங்கள் அதிபரை சந்திக்க ஆவலாக உள்ளோம். முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிழக்கு மாகாணப் பகுதியில் முஸ்லிம்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டது. ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றார் ரவூஃப் ஹக்கீம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக