திங்கள், ஏப்ரல் 23, 2012

குஜராத் இனப் படுகொலைகள் வழக்கில் மேலும் 12 பேர் விடுதலை !

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் போது, கோடாசர் என்னுமிடத்தில் 14 முஸ்லிம்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில் துணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்த 12 பேர் குஜராத் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுதந்தரித்த கும்பலிடமிருந்து தப்பியோடி வந்த முஸ்லிம்களைத் திறந்த வெளியில் சூழ்ந்துகொண்டு  15 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. இது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டிருந்த 15 பேரில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், மூவருக்கு இரண்டுவருடக் கடுங்காவல் தண்டனையும் அளித்து துணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இத்தீர்ப்பினை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இம்மேல்முறையீட்டு மனுவின் மீது விசாரணை நடத்தி வெள்ளியன்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ எல் தவே, என்வி அஞ்சாரியா ஆகியோர்  துணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்த 12 பேரையும் போதுமான சாட்சியங்கள் இல்லை என்ற காரணம் காட்டி விடுவித்துள்ளது. மேலும் 2 வருட சிறைத்தண்டனை பெற்றவர்கள் போதுமான காலம் சிறையில் இருந்துவிட்டதாக மேலும் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதன் பேரில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக