ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

பஹ்ரைனில் மோதல் தீவிரம்:ஒருவர் பலி!


மனாமா:ஃபார்முலா ஒன் க்ராண்ட் ஃப்ரீ போட்டி நடைபெறவிருக்கும் பஹ்ரைனில் அரசு எதிர்ப்பாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையேயான மோதல் வலுவடைந்துள்ளது. மோதலில் ஒருவர் பலியானார். எதிர் கட்சியான அல் வஃபாகின் தலைமையில் சீர்திருத்தம்கோரி போராட்டம் துவங்கியது.
. வெள்ளிக்கிழமை வலுவடைந்த போராட்டம் இன்று துவங்கவிருக்கும் ஃபார்முலா ஒன் க்ராண்ட் ஃப்ரீ போட்டி நடக்கும் இடத்தை நோக்கி பரவுவதை தடுக்க தலைநகரான மனாமாவில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஷியா முஸ்லிம் பிரிவினர் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு எதிராக எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த க்ராண்ட் ஃப்ரீ போட்டி போலீஸ் நடவடிக்கையில் 35 எதிர்ப்பாளர்கள் பலியானதை தொடர்ந்து கைவிடப்பட்டது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் அரசு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவ்வாண்டு க்ராண்ட் ஃப்ரீ போட்டியை நடத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக