வெள்ளி, ஏப்ரல் 20, 2012

மாவோ., "மக்கள் கோர்ட்டில்' ஜினா ஹிகாகா: முடிவு தெரியாமல் ஒடிசா அரசு தவிப்பு


புவனேஸ்வர்: ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா நேற்று "மக்கள் கோர்ட்டில்' ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரின் கதி என்னவானது என்று தெரியவில்லை.
ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகாவை கடத்திய மாவோயிஸ்ட்கள், தங்கள் அமைப்பைச் சேர்ந்த பலரை விடுவிக்க வேண்டும் எனக்கூறி, மாநில அரசுக்கு கெடு விதித்தனர். அந்தக் கெடு முடிவடைந்த நிலையில், சிறையில் உள்ள, 25 பேரை விடுவிப்பதாக, ஒடிசா மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பை நிராகரித்தனர். அத்துடன் எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகாவின் முடிவை தங்களின், "மக்கள் கோர்ட்' தீர்மானிக்கும் என்றும் கூறினர்.
இந்நிலையில், கோராபுட் மாவட்டத்தில் நாராயண் பட்டணம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், மாவோயிஸ்ட்களின், "மக்கள் கோர்ட்' நேற்று கூடிய போது, அதன்முன், ஜினா ஹிகாகா ஆஜர்ப்படுத்தப்பட்டதாக, மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர் நிஹார் ரஞ்சன் கூறினார். "மக்கள் கோர்ட்' நடவடிக்கைகள் எப்போது முடியும், கோர்ட்டில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து தன்னால் எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதனால், எம்.எல்.ஏ., வின் கதி என்னவாகுமோ என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், ஜினா ஹிகாகாவை விடுவிக்கும்படி, மாவோயிஸ்ட்களுக்கு மீண்டும் ஒரு முறை முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக