திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவரின் வீடு, நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் சிவ.காமராஜ். இவர் வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வருவதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.
மேலும் திருவாரூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜின் நிதி, முத்திரைதாள் கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் மன்னார்குடி பேருந்து நிலையத்திலும் உள்ள காமராஜியின் நிதி நிறுவனத்திலும், பாலக்கோட்டையில் உள்ள அவரது பார்ட்னரும் வர்த்தக சங்க செயலருமான சேதுராமன் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக