இஸ்தான்பூல்: கடந்த சனிக்கிழமை (13.04.2012) துருக்கி மாநகர் இஸ்தான்பூலில் உலக வல்லரசு நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக ஒன்றுகூடின.
அண்மைக் காலமாக உலக அரங்கில் ஈரானின் அணுச்சக்தி வளப்பாவனை குறித்த சர்ச்சைகள் சூடுபிடித்தபடி உள்ளன. 'ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறது;
இந்நிலையில், அணுச்சக்தி வளப்பாவனை குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமுகமாக கடந்த வருடம் ஜனவரியில் உலகின் வல்லரசு நாடுகள் கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தன. இதில், ஈரான், ஃபிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி முதலான நாடுகளின் பிரதிநிதிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைத் தலைவர் கதறீன் அஷ்டொனும் கலந்துகொண்டனர். என்றபோதிலும், அந்தப் பேச்சுவார்த்தை எத்தகைய இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படாத நிலையில் முடிவுற்றது.
அதன் பின்னர், ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்கள் பெரும் இழுபறிநிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்-அமெரிக்க நேசநாடுகளின் கோரிக்கையின் பேரில் ஈரானுக்கு எதிராய்ப் பொருளாதாரத் தடை விதிக்கவோ, அந்நாட்டின் மீது போர்ப்பிரகடனம் செய்யவோ உலகின் ஏனைய வல்லரசுநிலை நாடுகள் விரும்பாத நிலையிலேயே அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை ஒழுங்குசெய்யப்பட்டது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இதனை, "ஈரானுக்கு வழங்கப்படும் கடைசி சந்தர்ப்பம்" என்று வர்ணித்துள்ளார். எனினும், ஒபாமாவின் இந்தக் கூற்று குறித்து, "மிகச் சிக்கலான அரசியல் தீர்வுகளை ஒரே இரவில் பெற்றுவிடுவது சாத்தியமில்லை" என்று அரசியல் துறைசார் நிபுணர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை எத்தகைய உறுதியான தீர்மானமும் எடுக்கப்படாமல் தோல்வியடைந்த நிலையில், துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகானைத் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தப் பிரச்சினை குறித்து போதிய கவனம் செலுத்தி, உலக நாடுகளுடன் ஒத்துழைக்க முன்வருமாறு ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் கொமைனியிடம் கூறுமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இஸ்தான்பூலில் ஒழுங்குசெய்யப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈரான், ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
'ஈரான் ஆழ் நிலத்தடி ரகசியத் தளமொன்றை நிறுவி, அணு ஆயுத உற்பத்திக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது' என அமெரிக்க-இஸ்ரேல் நேசநாட்டு அணி தொடர்ந்தும் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், அதனை வன்மையாக மறுக்கும் ஈரான், தன்னுடைய உள்நாட்டுச் சக்திவளத் தேவைக்காகவே அணுச்சக்திவளம் பயன்பட்டு வருவதாய்த் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றது.
இதுகுறித்து ஒரு சமரசத்தைக் காணும் வகையில் ஒழுங்குசெய்யப்பட்ட மேற்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இரு தரப்புமே "எதிர்த் தரப்புடன் பூரணமாய் ஒத்துழைக்கத் தயார்" என அறிவித்துள்ள நிலையில், முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை விட புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக நம்பப்படுகிறது.
அதேவேளை, விரைவில் மேற்படி நாடுகளின் பிரதிநிதிகளின் ஈரானுடனான அடுத்தகட்ட சந்திப்பு அனேகமாய் ஈராக்கியத் தலைநகர் பக்தாதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறத
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக