திங்கள், ஏப்ரல் 16, 2012

கேலிசித்திரம் வரைவது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதி. மம்தாவால் பதவியிழந்த தினேஷ் திரிவேதி !

கேலிச்சித்திரம் வரைவது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதிதான் அதற்காக மம்தா  மனக்கலக்கம் அடையக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.‌பி.யுமான தினேஷ்திரிவேதி கூறியுள்ளார்
குஜராத் வந்திருந்த முன்னாள் அமைச்சர் தினேஷ்திரிவேதி, இது குறித்து கூறுகையில்," கேலிசித்திரம் வரைவது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதி தான். இதற்காக தண்‌டனை வழங்குவது சரியல்ல. இதற்காக அவர் மனக்கலக்கம் அடையக்கூடாது. கேலிசித்திரம்
வரைந்ததால் உங்களுடைய இமேஜ் ஒன்றும் பாதிக்காது.
அதே நேரத்தில் கேலி சித்திரம் வரைவது நாகரீகமானதாக இருக்க வேண்டும்.கலாச்சாரத்தை கெடுப்பதாக இருக்கக்கூடாது' என்றார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பற்றி கேலிச் சித்திரம் வரைந்து, இணையதளத்தில் பரவ விட்டதாக, ஜாதவ்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இவ்விவரகாரத்தில் கார்ட்டூன் வரைந்த பேராசிரியரை தாக்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக