செவ்வாய், ஏப்ரல் 24, 2012

ஆபாச சிடி விவகாரம்: அபிஷேக் சிங்வி பதவி விலகினார்


காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைத் தலைவர்களுள் ஒருவரும், புகழ்பெற்ற வழக்கறிஞரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் ஷிங்வி தனது சகாவான பெண் வழக்கறிஞர் ஒருவருடன் மோசமான நிலையில் இருந்த ஒளிப்படம் வெளியான விவகாரத்தில் இன்று தனது கட்சிப் பதவிகளிலிருந்தும் விலகியுள்ளார்.
அந்த ஒளிப்படத் தகடு போலியானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டு வந்த சிங்வி,தன்னுடைய ஓட்டுநர் ஒருவர் தன்மீதுள்ள வஞ்சத்தால் இப்படி போலியான ஒளிப்படத்தகடு தயாரித்து இணையத்தில் உலவ விட்டதாகக் கூறிவந்தார். பின்னர் அந்த ஓட்டுநரும் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தான் அவ்வாறு செய்ததாக ஒத்துக்கொண்டார்.


இருப்பினும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாலும் நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பக் கூடும் என்பதாலும் காங்கிரஸ் கட்சியே அவரை கட்சிப் பதவிகளிலிருந்து விலகி இருக்குமாறு  நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இவ்விவகாரம் வெளியான நாள் முதலே காங்கிரஸ் கட்சியும் சிங்கிவியை ஓரம்கட்டி வைத்துவிட்டது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் சிங்வி சந்தித்து வந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

இந்நிலையில் இன்று,செய்தியாளர்களைச் சந்தித்த  காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் நாடாளுமன்றத்தின்  சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவின் தலைவர் பொறுப்பு ஆகியவற்றிலிருந்து  தான் விலகுவதாக அபிஷேக் சிங்வி அறிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக