குர்கான்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும், யோகா குரு பாபா ராம்தேவும் சேர்ந்து வரும் ஜூன் மாதம் 3ம் தேதி ஊழலை எதிர்த்து டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். உடல் நலக்குறைவு காரணமாக உண்ணாவிரதம் இருக்காமல் இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மறுபடியும் ஊழலை எதிர்த்து வரும் ஜூன் மாதம் 3ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார். இம்முறை யோகா குரு பாபா ராம்தேவும் அவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார்.
இது குறித்து அன்னா குர்கானில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வலுவான லோக்பால் மசோதா அமலுக்கு வந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள பாதி அமைச்சர்கள் சிறையில் தான் இருப்பார்கள் என்றார். அப்போது பாபா ராம்தேவ் உடன் இருந்தார்.
ஜன் லோக்பால் மசோதாவை அரசியல் கட்சிகள் ஆதரிக்கக் கோரி அன்னா கடந்த மாதம் 25ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக உண்ணாவிரதப் பந்தலில் எம்.பி.க்கள், அரசியல் தலைவர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக அன்னா குழுவினர் சர்ச்சையில் சிக்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக