வியாழன், ஏப்ரல் 19, 2012

கைது மிரட்டலுக்கு எதிராக ஹாஃபிஸ் ஸயீத் நீதிமன்றத்தில் மனு !

Hafiz Saeedஇஸ்லாமாபாத்:அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து தனக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதை தடுக்கக் கோரி ஜமாஅத்து தஃவா ஸ்தாபகர் ஹாஃபிஸ் ஸயீத் லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மிரட்டல்கள் நிலவுவதால் தன் மீதான தாக்குதல்களுக்கு வாய்ப்புள்ளது என்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்கவும் மனுவில் ஹாஃபிஸ் ஸயீத் கோரிக்கை விடுத்துள்ளார்.இம்மனு மீதான விசாரணையின் போது ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பதில் தெரிவிக்க கோரி
பாக். அரசு, உள்துறை அமைச்சகம், பஞ்சாப் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு நீதிபதி அஸ்மத் ஸஈத் ஷேக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஸயீதுடன் அவரது மனைவியின் சகோதரர் ஹாஃபிஸ் அப்துல் ரஹ்மான் மக்கியும் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஹாஃபிஸ் ஸயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ள அமெரிக்கா, அப்துல் ரஹ்மான் மக்கீக்கு 20 லட்சம் டாலர் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது. பரிசுத்தொகை அறிவித்ததை வாபஸ் பெற அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்குமாறு பாக். அரசுக்கு உத்தரவிடவும் இருவரும் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளனர்.
நடவடிக்கை எடுக்கும் முன்பு அமெரிக்காவிடம் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை கேட்கவேண்டும். ஆதாரம் இல்லாமல் எவரையேனும் கைது செய்வது சட்டவிரோதம் ஆகும் என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக