ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ராம்தேவ்-ஹஸாரே உண்ணாவிரதம்: ஹிந்துத்துவா தலைவர்களும் பங்கேற்பர்!

புதுடெல்லி:அன்னா ஹஸாரேவுடன் இணைந்து வருகிற ஜூன் மாதம் ராம்தேவ் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளில் ஒருவரான ஹிந்து தீவிரவாத பெண் சன்னியாசி சாத்வி ரிதம்பரா உள்ளிட்ட ஹிந்துத்துவா தலைவர்கள் பங்கேற்பார்கள் என செய்தி வெளியாகி உள்ளது. இதனை ராம்தேவ் மறுக்கவில்லை.
முந்தைய போராட்டத்தின் போது மேடையில் ஹிந்துத்துவா தலைவர்கள் பங்கேற்றதைத் தொடர்ந்து உருவான சர்ச்சையால் ஹஸாரே குழுவினர் ராம்தேவிடம் சற்று இடைவெளியை கடைப்பிடித்து வந்தனர்.
ஒரு வருட இடைவெளிக்கு பிறகு நாங்கள் மீண்டும் ஊழலுக்கு எதிராக இணைந்துவிட்டோம் என்று கடந்த மாதம் ஹஸாரே அறிவித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் பரஸ்பரம் ஒத்துழைப்போம் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.
தன்னுடன் இணைந்து செயல்படுவதில் ஹஸாரே குழுவிற்கு எதிர்ப்புகள் இல்லை என்றும், நாட்டை பாதுகாப்பதே(?) நோக்கம் என்றும் ராம்தேவ் கூறுகிறார்.
ஏற்கனவே ஹஸாரே குழுவின் செயல்பாடு பிடிக்காமல் ஹஸாரே குழுவின் மத்தியக்கமிட்டியில் ஒரேயொரு முஸ்லிம் தலைவரான முஃப்தி ஷமீம் காஸ்மி கமிட்டியில் இருந்து ராஜினாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக