வியாழன், ஏப்ரல் 19, 2012

இஸ்லாத்தை ஏற்ற இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் – ஆதரவாக செயல்படும் போலீஸ் !

Sarathகொச்சி:இஸ்லாத்தை எவ்வித வற்புறுத்தலும் இன்றி தாமாகவே முன்வந்து தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இளம்பெண்ணை டாடா சுமோ காரில் கடத்திச்செல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்கு போலீஸ் ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம் காயங்குளத்தைச் சார்ந்த நிம்மி என்ற 25 வயது பெண்மணி தாமாகவே முன்வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் தனது பெயரை அம்னா என்று மாற்றிக் கொண்டார்.இந்நிலையில்
அப்பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவை(ஆட்கொணர்) தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான அம்னா, தான் யாருடைய வற்புறுத்தலும் இன்றி சுயமாகவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி, சுதந்திரமாக தீர்மானம் எடுக்க அம்னாவுக்கு அனுமதி அளித்தார். பின்னர் அவர் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வேளையில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத கும்பல் அம்னாவை கடத்திச்சென்று ஆபத்தை ஏற்படுத்த முயன்றது.
பலத்த பாதுகாப்பு நிறைந்த உயர்நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வைத்து இளம்பெண் ஒருவர் கடத்தப்படுவதை போலீஸ் வேடிக்கை பார்த்தது. இதனைப் பார்த்த சிலர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை அளித்தனர். இதனைத் தொடர்ந்து கலூர் சந்திப்பில் வைத்து டாடா சுமோ காரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
டாடா சுமோ காரின் சீட்டில் கம்பிகள் உள்பட கடுமையான ஆயுதங்கள் இருந்தன. இதுத்தொடர்பாக மொபைலில் பதிவான வீடியோவும் உள்ளது. ஆனால், வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ் ஆயுதங்கள் இல்லை என்று நாடகமாடுகின்றனர். அதேவேளையில் இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய சரத் என்பவன் ஆர்.எஸ்.எஸ் காரர் என்றும் சரத்துடன் இணைந்து செயல்பட்ட இன்னொரு ஆர்.எஸ்.எஸ் காரனை உடனே கைது செய்வோம் என்றும் போலீஸ் அறிவித்துள்ளது.
ஆனால், குற்றவாளிகளை அப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் சோதனை நடத்த போலீஸ் தயாராகவில்லை. இங்கு நடந்த முகாமில் இஸ்லாத்தை ஏற்ற அம்னாவை கடத்திச் செல்லும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இக்கடத்தல் சம்பவத்திற்கு தலைமை தாங்கியவர் வி.ஹெச்.பி ஹிந்துத்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் அலுவலக செயலாளரும், பா.ஜ.க எர்ணாகுளம் தொகுதி வேட்பாளருமான சி.ஜே.ராஜகோபால் என்று கூறப்படுகிறது. இவர் அம்னா நீதிமன்றத்தில் ஆஜராகும் பொழுதெல்லாம் வருகை தந்துள்ளார். காயம்குளம் பா.ஜ.க உள்ளூர் தலைவர் அஸ்வினி தேவ் என்பவரும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
உண்மையான குற்றவாளிகளை மறைத்து விட்டு போலியான நபர்களை ஆஜர்படுத்தவும் முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக