டெல்அவீவ்:ஃபலஸ்தீன் ஆதரவு வெளிநாட்டு சமூக ஆர்வலரை இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் தாக்கும் காட்சி வெளியாகி உள்ளது.ஆக்கிரமிப்பு மேற்கரையில் சைக்கிள் பேரணியில் பங்கு கொள்ளும் வேளையில் டென்மார்க்கைச் சார்ந்த சமூக ஆர்வலரை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது.யூ ட்யூபில் வெளியான இவ்வீடியோ காட்சி இஸ்ரேலின் சேனல் 10 இல் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து விவாதத்தை கிளப்பியது.இஸ்ரேல் பிரதமர்
நெதன்யாகு இச்சம்பவத்தை கண்டித்துள்ளார். விசாரணை முடியும் வரை லெஃப்.கர்னல் ஷாலோம் ஈஸ்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஜோர்டானில் கடந்த சனிக்கிழமை ஃபலஸ்தீனர்களும், வெளிநாட்டு சமூக ஆர்வலர்களும் இணைந்து சைக்கிள் பேரணியை துவக்கினர். இவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. கீழே விழுந்த டென்மார்க் குடிமகனை ராணுவ வீரன் மீண்டும் துப்பாக்கியால் தாக்கியுள்ளான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக