புதன், ஏப்ரல் 18, 2012

மத்திய அரசின் முஸ்லிம் கல்வி உதவித் தொகையை மறுத்துவிட்டு வக்ஃப் போர்ட் மூலம் வழங்கும் மோடியின் நாடகம் !

அஹ்மதாபாத்:மத்திய அரசின் முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி தொகையை வழங்க மறுத்த குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி குஜராத் மாநில வக்ஃப் போர்ட் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்க முனைந்துள்ளார். 2005-ஆம் ஆண்டு துவங்கிய மத்திய அரசு வழங்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மோடி அரசு ஒவ்வொரு வருடமும் அதனை வழங்காமல் திருப்பி அனுப்பி வருகிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு மட்டும் அளிக்கும் கல்வி உதவி
தொகை பாரபட்சமானது என்ற காரணத்தை மோடி அரசு கூறுகிறது.
மத்திய அரசு முஸ்லிம்  மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையின் 75 சதவீதத்தை வழங்குகிறது. ஆனால், மாநில அரசு 25 சதவீதம் வழங்கினால் போதுமானது. இத்தொகையை அளிக்க மோடி அரசு குருட்டு நியாயம் கூறி முஸ்லிம் மாணவர்களுக்கான உரிமையை மறுத்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் கனவில் ஆழ்ந்துள்ள மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறார். வக்ஃபோர்ட் மூலமாக அதிகபட்ச மதிப்பெண்கள் பெறும் 10 மற்றும் 12-வது வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதுதான் மோடி அரசின் திட்டம். 85 சதவீத மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பில் வெற்றி பெறும் முஸ்லிம் மாணவர்களுக்கும், 80 சதவீத மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பில் வெற்றி பெறும் முஸ்லிம் மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும். ரூ.3000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெறும் மாணவர்களுக்கும், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெறும் மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.ரு.4000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இம்மாதம் இறுதியில் 1800 மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அஹ்மதாபாத், சூரத், வதோதரா ஆகிய நகரங்களில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மத்திய அரசு அனைத்து முஸ்லிம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் உதவித் தொகையை பாரபட்சம் எனக்கூறி நிராகரித்த மோடி, தற்பொழுது வக்ஃப் போர்ட் மூலம் உதவித் தொகையை அதுவும் வெறும் 1800 பேருக்கு மட்டுமே வழங்கி தனது இமேஜை மேம்படுத்த நாடகம் போடுகிறார். ஆனால், இத்தொகையும் வக்ஃப் போர்ட் மூலமாகத்தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆக முடியாது என்ற பழமொழியைப் போல  எவ்வளவுதான் முயன்றாலும் மோடிக்கு  பிரதமர் பதவி எட்டாக்கனிதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக