புதன், ஏப்ரல் 25, 2012

இராணுவ ரீதியான சீனாவின் போட்டியை சமாளிக்க இந்தியா விழிப்புடன் செயற்பட வேண்டும்

     இராணுவ ரீதியாக சீனா, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் இடையே ஒரு போட்டியான சூழ்நிலை நிலவுவது ஆசியாவின் பாதுகாப்பிற்கு நிச்சியமாக பாதிப்பு ஏற்படலாம் என்று மத்திய இராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார.
தலைநகர் புதுடெல்லியில் முப்படை கொமாண்டர்களின் மாநாட்டில் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில், இராணுவ ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் பாதுகாப்பு சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தப் பிராந்திய நிலவரங்களை நமது இராணுவத்தினர் கவனிக்க வேண்டும்.
சீன அச்சுறுத்தல்: பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் தன் பலத்தை நிரூபிக்கும் வகையில் சீனா செயற்படுகிறது.

இராணுவ ரீதியாக சீனா, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் இடையே ஒரு போட்டியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆசியாவின் பாதுகாப்பு சூழலில் நிச்சயமாக பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலவரங்கள் எல்லாம் ராணுவத்தினரின் முப்படையினருக்கும் சவாலாக அமையலாம்.
எனவே சீனா விடயத்தில் நாம் விழிப்பாக இருந்து நமது பணிகளை செம்மையாக செய்ய வேண்டும் என்றார்.
சைபர் குற்றம்: சைபர் குற்றங்களைப் பொறுத்தவரையில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இணையதளம் மூலம் தூண்டப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை குறைப்பதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அதேபோல் தகவல் தொழிநுட்பங்களை பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும்.
ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில் உள்ள தாமதங்களை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ராணுவத் தேவையைக் கருத்தில் கொண்டு, ராணுவம் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களும், தளவாடத் தொழிற்சாலை வாரியங்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அந்தோணி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக