வியாழன், ஏப்ரல் 26, 2012

அக்னி 5 ஏவுகணைக்கு போட்டியாக பாகிஸ்தான் செலுத்திய ஷாகின் 1ஏ ஏவுகணை சோதனை வெற்றி !

Pakistan launch Shakin 1A missile successfully.
 அக்னி - 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து சில நாள்களே ஆன நிலையில், பாகிஸ்தான் புதன்கிழமை அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லவல்ல "ஹட்ஃப் - 4' அல்லது "ஷாகின் 1ஏ' என்றழைக்கப்படும் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியது. இது தொழில்நுட்பரீதியில் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையாகும். இந்தியாவின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையின் தாக்கும் திறன், தொலைவு குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், 1000 கி.மீ. தொலைவு வரை தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

ஏவுகணை சோதனை குறித்து ஏற்கெனவே இந்தியாவுக்கு தகவல் தந்துவிட்டோம். ஏவுகணை செலுத்தப்படும் பகுதியில் விமானம் எதுவும் பறக்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டோம் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.

பாராட்டு: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோர் ஏவுகணை விஞ்ஞானிகளுக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் தங்களது பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

ராணுவ திட்டமிடல் பிரிவின் தலைமை இயக்குநரும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான காலித் கித்வாய், லெப். ஜெனரல் தாரிக் நதீம் கிலானி ஆகியோர் ஏவுகணை செலுத்தப்படும்போது உடனிருந்தனர்.

இலக்குகளைத் தாக்குவதில் துல்லியமாக இருந்தது; இது பாகிஸ்தானின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் என விஞ்ஞானி ஒருவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக