பனாஜி:2006 ஆம் ஆண்டு கோவாவின் குர்சோரெம்-சன்வோர்டெம் (Curchorem-Sanvordem) நகரங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வகுப்பு கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 40 பேரை நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது.பா.ஜ.க பொதுச்செயலாளர் சதீஷ் தோண்ட், மூத்த தலைவர் ஷர்மாத் ரெய்துர்கர் ஆகியோர் உள்பட 40 பேரை போதுமான ஆதாரம் இல்லை எனக்கூறி நீதிமன்றம் விடுதலைச்
செய்தது.
2006 மார்ச் 2,3 தேதிகளில் ஒரு மதரஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து கலவரம் துவங்கியது. சட்டவிரோதமாக மதரஸா கட்டப்பட்டதாக குற்றம்சாட்டி தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரம் 3 நாட்கள் நீடித்தது. கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் நஷ்டம் அடைந்தன.
குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வியை தழுவியதாக நீதிபதி விகாயா பால் தனது தீர்ப்பில் தெரிவித்தார். கோவாவில் நடைபெற்ற முதல் கலவரம் இதுவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக