சனி, ஏப்ரல் 28, 2012

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் தோல்வி: 4 ஆண்டுகளில் செலவானது 35% மட்டுமே !

file1புதுடெல்லி:இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக 11-ஆம் ஐந்து ஆண்டுகள் திட்டத்தில் உட்படுத்திய நலத்திட்டங்கள் வீணானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான திட்ட கால அளவில் சிறுபான்மையினர் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட நிதிகளும், நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களும் பலன்
தரும் வகையில் உபயோகப்படுத்தவில்லை என்று இதுக்குறித்து ஆய்வுசெய்த திட்டக்கமிஷன் சிறுபான்மை விவகார ஸ்டியரிங் கமிட்டி உறுப்பினர் கவ்ஹர் ராஸா, ஃபவுண்டேசன் ஃபார் சிவில் லிபர்டீஸ் தலைவர் எம்.ஹிலால், சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் அடங்கிய குழு கூறுகிறது.
11-ஆம் ஐந்தாண்டு திட்டத்தின் கால அளவில் சிறுபான்மை நலனுக்காக 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகள் கழிந்த பொழுது இத்தொகையின் 35 சதவீதம் மட்டுமே(487 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து பெருந்தொகை இந்திரா வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர பொதுத் திட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நிதிகளின் பற்றாக்குறை, திட்டங்களை அமலாக்குவதை கண்காணிக்கும் அமைப்பின் வீழ்ச்சி, இதர தொடர் நடவடிக்கைகள் இல்லாமை, அரசு அமைப்புகளில் வேரூன்றிய வகுப்புவாத காரணிகள் ஆகியன சிறுபான்மை திட்டங்கள் தோல்வி அடைய காரணம் என இதுக்குறித்து ஆய்வுச் செய்த குழு கூறுகிறது. ஆனால், அரசின் ஆர்வமின்மை காரணமாக பெரும்பாலான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று ஆய்வுக்குழு கூறுகிறது.
சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும், குறிப்பாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் திட்டமிடப்பட்ட நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எல்லா துறைகளில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று சச்சார் கமிட்டி கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து அரசு ஏராளமான சிறுபான்மையினர் நலத்திட்டங்களை அறிவித்தது. ஆனால், இவை 90 சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டங்களுடன் ஒதுங்கியது. அதில் பெரும்பான்மையான திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். இம்மாவட்டங்களில் நிறுவப்பட்ட பள்ளிக்கூடங்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து 10 அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் ஆகும்.
கீழ்மட்டத்தில் இத்திட்டங்கள் குறித்து கண்காணிக்கும் அமைப்பு இல்லாமையும், அரசு கட்டமைப்புகளில் ஊடுருவியுள்ள வகுப்புவாத சக்திகளும் சிறுபான்மை நலத்திட்டங்களுக்கு தடையாக மாறின என்று எஸ்.எம்.ஹிலால் கூறுகிறார்.
போதுமான விகிதம் இல்லை என்று கூறி சிறுபான்மை நலத்திட்டங்களுக்கான நிதியை பல்வேறு மாநிலங்கள் செலவழிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளன. மாவட்டங்களை தேர்வுச் செய்வதற்கு பதிலாக பஞ்சாயத்து ப்ளாக்குகளுக்கு நிதியை நேரடியாக அளிக்கவேண்டும் என்றும், நகர பகுதிகளை இத்திட்டங்களில் சேர்க்கவேண்டும் என்றும் ஹிலால் கோரிக்கை விடுத்துள்ளார்.
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் எஸ்.சி பிரிவினருக்கு தனிநபர் விகிதம் 1,228 ரூபாய் ஆகும். எஸ்.டி பிரிவினருக்கு தனி நபர் விகிதம் 1,450 ரூபாய் ஆகும். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தனிநபர் விகிதம் ரூ.138 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பத்து மடங்கு அதிகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளை சுட்டிக்காட்டி இக்குழுவினர் திட்டக்கமிஷன் உறுப்பினர்களை சந்தித்தனர். இதற்கு தீர்வு காண்பதற்கான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கவேண்டிய திட்டங்களின் வழிகாட்டுதல் ஆவணம் ஆகியவற்றை திட்டக் கமிஷனுக்கு இக்குழுவினர் சமர்ப்பித்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக