பாகிஸ்தானின் பஸ்தூன் மலைப்பகுதியிலுள்ள பான்னூ என்ற இடத்தில் சிறைச்சாலையில், போராளிகள் உள்ளிட்ட பல்வேறு கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தலிபான் போராளிகள் அங்கு திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ராக்கெட் குண்டுகளும், கையெறி குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் ஜெயில் தகர்ந்தது.
பின்னர் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தங்கள் கூட்டாளிகளை விடுவித்தனர். அப்போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மரண தண்டனைக் கைதிகள் 21 பேர் உள்பட மொத்தம் 384 கைதிகள் தப்ப வைக்கப்பட்டனர்.
சிறையை உடைத்துத் தப்பிச் சென்றவர்களை பிடிக்க பாகிஸ்தான் போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். தப்பிச் சென்ற 384 கைதிகளில் இதுவரை 108 பேர் தாங்களாகவே சிறைக்கு திரும்பியதாகவும், 35 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மாகாண உள்துறைச் செயலர் ஆசம் கான் தெரிவித்தார். தப்பியோடியவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக