உத்தரபிரதேச மாநிலத்தில் பாயும் அந்த ஜீவநதி தொழிற்சாலைக் கழிவுகள், பிரேதங்கள் ஆகியவற்றின் காரணமாக உலகின் அழுக்கான நதிகளுள் குறிக்கத்தக்கதாகவும் உள்ளது.
கங்கை நதியை தூய்மைப்படுத்த கங்கையை காப்போம் என்ற முழக்கத்துடன் ஹிந்து அமைப்புகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இப்போது, கங்கை நதியை சுத்தப்படுத்தும் நற்பணியில் தாங்களும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக முஸ்லிம் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
வாரணாசியில் உள்ள அகில இந்திய முஸ்லிம் சட்ட பிரிவை சேர்நத மெளலானா கல்பே ஜாவீத் என்பவர் கூறுகையில் கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சியில் உ.பி.மாநில அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்திய அரசு கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் , மாசுஅடைவதிலிருந்து பாதுகாக்க எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
நதித் தூய்மைப்படுத்தும் சேவையில் முஸ்லிம்களும் பங்குபெற உள்ளனர். மேலும் ஹிந்துக்களோடு நட்புறவு பாராட்டவதற்காக மட்டுமல்லாது அதற்கும் மேலாக கங்கையின் அவலநிலையை போக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே முஸ்லிம்கள் முன்வருவதன் பிரதான காரணம் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக