வியாழன், ஏப்ரல் 19, 2012

சட்டவிரோதமாக குடியேறியவர்களை மன்னித்து தாய்நாட்டிற்கு அனுப்ப மலேசியா முடிவு !

மலேசியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு பொது மன்னிப்பு  அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மலேசியாவைப் பொறுத்த வரையில் தோட்ட வேலை, கட்டுமானப் பணிகள் மற்றும்  ஓட்டல் வேலைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களையே அதிக அளவில் நம்பியுள்ளது.இதன் காரணமாக வேலை வாய்ப்பு தேடி பல்வேறு நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு  சட்டவிரோதமாக குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக
இந்தோனேஷியாவிலிருந்து மட்டும் சட்டவிரோதமாக 82 ஆயிரத்து  253 பேர் குடியேறியுள்ளனர்.இதற்கு அடுத்ததாக இந்தியாவிலிருந்து 10,091 பேர்  குடியேறியுள்ளனர்.

இவர்கள் தவிர நேபாளம், மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை மற்றும்  சீனாவிலிருந்தும் ஏராளமானோர் குடியேறியுள்ளனர். 

இதையடுத்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை எந்தவித தண்டனைகளும் இன்றி  மன்னிப்பு அளித்து, அவர்களை தாய்நாட்டிற்கு அனுப்ப மலேசிய அரசு முடிவு  செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக