வியாழன், ஏப்ரல் 26, 2012

மோடிக்கு விசா மறுத்ததை மறுபரிசீலனைச் செய்ய அமெரிக்க எம்.பி கோரிக்கை!

வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் நுழைய விசா மறுக்கப்பட்டது தொடர்பான நடவடிக்கையை மறு பரிசீலனைச் செய்ய அமெரிக்க காங்கிரஸ்(பாராளுமன்றம்) எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசு கட்சியை சார்ந்த எம்.பியான ஜோ வால்ஸ், மோடிக்கு விசா அனுமதிக்க கோரி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசு கட்சி எம்.பியின் நடவடிக்கையை அமெரிக்க இந்திய சமூகம் கண்டித்துள்ளது. மோடிக்கு விசா அனுமதிக்காத நடவடிக்கையை மறு பரிசீலனைச் செய்யக்கூடாது என்று அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. குடியரசு கட்சி எம்.பியின் கோரிக்கைக்கு ஹிலாரி இதுவரை பதிலளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக