மாநில அரசின் தலைமை நாடாளுமன்ற செயலாளர் (CPS) என்ற பெரும் பொறுப்பில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் விஷம் குடித்துள்ள செய்தி ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலத்தின் தலைமை நாடாளுமன்ற செயலாளராக பொறுப்பான பதவியில் இருக்கும் ராம் கிஷன் ஃபாவுஜி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஃபாவ்ஜி திடீரென்று விஷம் குடித்ததை அடுத்து சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தன்னுடைய வீட்டில் விஷம் அருந்திய நிலையில் சுயநிநனைவு இல்லாமல் இருந்த ஃபாவுஜியை வீட்டு வேலைக்கு வந்த பணியாளர்கள் உடனடியாக சண்டிகரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்த்துள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஃபாவூஜியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உடல் முழுவதும் விஷம் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மாநில முதல்வர் பூபேந்தர்சிங்ஹூடா மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.தலைமை நாடாளுமன்ற செயலாளர் பொறுப்பை இரண்டாம் முறையாக வகித்து வரும் ஃபாவுஜி விஷம் குடிப்பதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் முதல்வர் பூபேந்தர்சிங் ஹூடாவை சந்தித்திருந்ததாகவும், அவர் மனமுடைந்துகாணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக