வியாழன், ஏப்ரல் 12, 2012

ஓதே கூட்டுப் படுகொலை:18 பேருக்கு ஆயுள் !

Police escort accused personsஅஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஆனந்த் மாவட்டம் ஓதேவில் 23 முஸ்லிம்கள் கொடூரமாக உயிருடன் எரித்துக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் 18 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முதல்வர் மோடியின் ஆசிர்வாதத்துடன் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு
எதிராக நடத்திய இனப்படுகொலை இந்திய வரலாறு காணாத மிகவும் கொடூரமானதாகும். அவ்வேளையில் ஆனந்த் மாவட்ட  ஓதேவில் வெறியுடன் நுழைந்த காவி வெறியர்கள் முஸ்லிம்களை கொலைச்செய்ய தேடினர். அப்பொழுது சங்க்பரிவார கயவர்களுக்கு பயந்து 3 மாடிக் கட்டிடத்தில் உயிருக்கு அஞ்சி பதுங்கியிருந்த 23 பேரை கண்டனர். அவர்கள் இருந்த வீட்டை ஹிந்து வெறியர்கள் ஈவு இரக்கமின்றி எரித்தனர். இதில் 9 குழந்தைகள் உள்பட 23 பேர் எரிந்து பலியாகினர்.
ஹிந்துத்துவா வெறியர்கள் நிகழ்த்திய இப்படுகொலையில் மஜீத் மியான் என்பவர் மட்டுமே உயிர்தப்பினார். இவரது குடும்பத்தினர் 13 இச்சம்பவத்தில் எரித்துக் கொலைச் செய்யப்பட்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டுக் கைதான 47 பேர் மீது ஆனந்த் நகரில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கடந்த திங்கள்கிழமையன்று 23 பேர் குற்றவாளிகள் என்றும், 23 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தது. ஒருவர் விசாரணையின்போதே இறந்து போய்விட்டார். தற்போது தண்டனை வழங்கப்பட்ட 23 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கும் தலா ரூ. 5800 அபராதம் மற்றும் 7 ஆண்டு தண்டனை பெற்ற ஐவருக்கும் தலா ரூ. 3800 அபராதமும் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த இனப் படுகொலைகளில் 9 கூட்டுப் படுகொலைகளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவற்றில் ஏற்கனவே 33 பேர் கோரமாக கொலைச் செய்யப்பட்ட சர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்பொழுது 2-வது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக