லாகூர்:வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள சிறைச்சாலையில் இருந்து ஏராளமான கைதிகள் தப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு எதிர்ப்பாளர்கள் பனூ செண்ட்ரல் சிறையை தாக்கி கைதிகள் தப்புவதற்கு உதவினர். ஆயுதங்களை ஏந்திய குழு ஒன்று பனு செண்ட்ரல் சிறையில் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 300 கைதிகள் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கியால் சுட்டும் க்ரேனேடுகளை உபயோகித்தும்
அவர்கள் சிறையை தாக்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பனு செண்டரல் சிறையில் மொத்தம் 944 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் 6 ப்ளாக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. சிறை மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 400 சிறைக்கைதிகள் தப்பியதாக சந்தேகிப்பதாகவும் இன்னொரு சிறை அதிகாரி தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதலை நடத்திய குழுவில் 150 பேர் இருந்ததாக அல்ஜஸீரா கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக