கெய்ரோ:எகிப்தில் நடைபெறவிருக்கும் அதிபர் போட்டியிட இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர் கைராத் அல் ஷாத்திர் உள்பட 10 வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஃபாரூக் சுல்தான் தலைமையிலான தேர்தல் கமிஷன் 10 பேருக்கு தடை விதித்துள்ளது. முபாரக் ஆட்சிகாலத்தில் துணை அதிபராக பதவி வகித்த முன்னாள் உளவுத்துறை தலைவர் உமர் சுலைமான், இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர் கைராத் அல் ஷாத்திர், வழக்கறிஞரும், சொற்பொழிவாளருமான ஹாஸிம் அபூ இஸ்மாயீல்
ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் 10 பேருக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது. ஆனால், எகிப்து தேர்தல் சட்டத்தின்படி போட்டியிட தடைச் செய்யப்பட்டவர்களுக்கு 48 மணிநேரத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.
வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து எகிப்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தடை விதிக்கப்படலாம் என்று கருதி இஃவானுல் முஸ்லிமீன் மாற்று வேட்பாளரை நிறுத்தியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக