திங்கள், ஏப்ரல் 16, 2012

ஹைதராபாத் கலவரத்திற்கு காரணமான ஹிந்துத்துவா தீவிரவாதி கைது

ஹைதராபாத்:பழைய ஹைதராபாத் நகரில் அனுமன் கோயிலில் மாட்டுக் கறியை வீசிவிட்டு அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட்டு கலவரத்தை உருவாக்கிய ஹிந்துத்துவா தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் பழைய ஹைதராபாத் நகரில் பஹதூர்பூராவில் உள்ள நந்தி முஸ்லைகுடா பகுதியில் ஹனுமான் கோயிலில் யாரோ ஒரு நபர் மாட்டு இறைச்சியை வீசிவிட்டு சென்றதை தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். இதில்
முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. போலீசார் கைக்கெட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிரபராதிகளான முஸ்லிம்களை கைது செய்த போலீஸார் ஹிந்துத்துவா தீவிரவாதிகளை சும்மா விட்டனர். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி ஜி.சிவகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கால்கிலோ மாட்டு இறைச்சியை கடையில் இருந்து வாங்கி இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்ட கோயிலில் வீசியுள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் முன்னிலையில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்ட சிவகுமார்(வயது 18) மீது IPC153/A மற்றும் 295 ஆகிய சட்டப் பிரிவுகளின் படி, (Crime No 83/2012) வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக