ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

பாகிஸ்தானில் உளவு விமானத் தாக்குதல்கள் தொடரும்: அமெரிக்கா !

Drone எனப்படும் ஆளில்லா விமானங்கள்  மூலம் பாகிஸ்தானில் நடத்தப்படும் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தீவிரவாத எதிர்ப்புத் தாக்குதல் என்ற பெயரில் பாகிஸ்தான் வான்வெளியில் அமெரிக்க விமானப் படைகள் சிறியரக ஆளில்லா விமானங்கள்  மூலம் திடீர் திடீரென தாக்குதல் நடத்தி வருகின்றன. அனுமதி இல்லாமல் அத்துமீறி அமெரிக்க விமானங்கள் நுழைவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த Drone எனப்படும் ஆளில்லா உளவு விமானத் தாக்குதலில் அமெரிக்க எதிர்ப்புத்
போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள், இராணுவ வீரர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அண்மையில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதையடுத்து, உளவு விமானத் தாக்குதலை நிறுத்த வேண்டும், வீரர்கள் பலியானதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தன் நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பாகிஸ்தானின் இந்தத் தீர்மானம் குறித்து அமெரிக்க  
பயங்கரவாத அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பு கிடைக்க தொடர்ந்து பேச்சு நடத்துவோம். அதேநேரத்தில் போராளிகள் பதுங்கி இருப்பது உறுதியாக தெரிந்தால், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று கூறினர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக