வெள்ளி, ஏப்ரல் 13, 2012

முஸ்லிம் லீகருக்கு அமைச்சர் பதவி - பா ஜ க எதிர்த்து பந்த் !

BJP protest against muslim being ministerகேரள மாநிலத்தில் முஸ்லீம் லீக்கின் மஞ்சளம்குழி அலீ அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஐக்கிய  ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்திவருகிறது. காங்கிரஸ் தலைமையிலான அந்த ஆட்சியில் இரண்டாவது பெரிய கட்சியாக முஸ்லிம் லீக் உள்ளது.
முஸ்லிம் லீக கட்சிப் பிரமுகர்  மஞ்சளம்குழி அலீ என்பவருக்கு அமைச்சர் பதவி அளிக்க உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு
முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி கேரளாவில் இன்று `கறுப்பு தினம்'  என்று அறிவித்தது. மாநிலமெங்கும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில்  கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது. நடைப்பயணம், மாவட்ட த் தலைநகரங்களில் அரசு அலுவலகங்களின் முன் எதிர்ப்பு முழக்கங்களை பாரதிய ஜனதா தொண்டர்கள் எழுப்பினர்.

இந்த எதிர்ப்புப் பேரணியில் நெய்யாற்றின்கரா மற்றும் கட்டக்கடா ஆகிய இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன. மஞ்சளம்குழி அலீ கடந்த வருடம் தான் முஸ்லிம் லீக்கில் இணைந்தவர் என்பதும் அதற்குமுன்பு கம்யூனிஸ்ட் கட்சியில்  சட்டமன்ற உறுப்பினராகத்தான் கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிக்கத்தக்கது. கேரள அமைச்சரவையில்  இவரோடு சேர்த்து முஸ்லிம் லீக் அமைச்சர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயருகிறது. சிறுபான்மையினர் நலம் நகரவளர்ச்சி ஆகிய துறைகளை அலீ கவனிப்பார் என்று அமைச்சரவை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக