வெள்ளி, ஏப்ரல் 13, 2012

அமெரிக்க விமான நிலையத்தில் ஷாருக்கான் 2 மணிநேரம் சிறைவைப்பு !

நியூயார்க்:பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கான் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் 2 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டார். அமெரிக்காவின் பிரபல யேலே பல்கலைக்கழகம் அறிவித்த ஃபெலோஷிப்பை பெறுவதற்காக அவர் நியூயார்க் வருகை தந்தார். ஷாரூக் கானுடன் நீதா அம்பானியும் உடனிருந்தார். இவர் யேலே பல்கலைகழக மாணவி
ஆவார்.
கான் இதுக்குறித்து தெரிவிக்கையில் இது வழக்கமானதுதான் என்று குறிப்பிட்டார். 2009-ஆம் ஆண்டும் இதே போலவே ஷாருக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தான் முஸ்லிம் என்பதால் தடுத்து அமெரிக்க விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அப்பொழுது ஷாரூக் கான் அங்கலாய்த்தார்.
கான் தடுத்து வைக்கப்பட்டது குறித்து யேலே பல்கலைக்கழக நிர்வாகிகள்  வாஷிங்டனில் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி மற்றும் இம்மிக்ரேசன், கஸ்டம்ஸ் துறையை தொடர்புக்கொண்டு விளக்கம் கேட்டனர்.
அமெரிக்க விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதால் ஷாரூக் கான் மிகவும் அப்செட்டாக இருந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக