புதுடெல்லி:திருமணத்தை பதிவுச் செய்வது இனி இந்தியாவில் கட்டாயம் ஆகிறது. இதுத்தொடர்பான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. பிறப்பு, இறப்பு பதிவுச் செய்வது போலவே திருமணமும் இனி கட்டாயமாக பதிவுச் செய்யப்படவேண்டும். திருமணப் பதிவை எளிதாக்கவும், கலப்புத் திருமணம் செய்வோருக்கு உதவும் வகையிலும் இந்திய திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சட்ட அமைச்சகத்தின் இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய
அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
அதேநேரத்தில் பதிவுத் திருமணம் புரிவோர் தங்களது மதம் குறித்து தகவலை வெளிப்படுத்த தேவையில்லை.
சீக்கியர்களுக்கு திருமண பதிவிற்கு அனுமதி அளிக்கும் 1909-ஆம் ஆண்டு ஆனந்த் திருமணச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சீக்கிய சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும் இது. பாராளுமன்றத்தின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் திருமண பதிவை கட்டாயமாக்கும் மசோதா தாக்கல் செய்யப்படும்.
சீக்கியர்களும், புத்தர்களும், ஜைனர்களும் தற்பொழுது ஹிந்து திருமணச் சட்டத்தின்படி தங்களது திருமணங்களை பதிவுச் செய்கின்றனர். முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்களுக்கு திருமணத்தை பதிவுச்செய்ய தனியாக சட்டங்கள் உள்ளன.
திருமண-பாதுகாப்பு வழக்குகளில் தேவையற்ற கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க மேற்கண்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக