சனி, ஏப்ரல் 14, 2012

மீண்டும் பார்ப்பண ஆயுதத்தை கையிலெடுக்கும் காங்கிரஸ்: ராகுலின் அரைவேக்காட்டுத் தனம்!


டெல்லி:காங்கிரஸ் கட்சி பார்ப்பணர்களின் ஆதிக்க கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்க தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக டெல்லியில் அண்மையில் ராகுல்காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாதி ஆயுதம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல்காந்தி சட்டென “நான் ஒரு பிராமின்… அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்” என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களின் தோழன் வேடம் போட்ட காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பல வித்தைகளை பயிற்றுவித்த போதும் எதுவும் சாதிக்க இயலவில்லை. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு, தலித்துகளின் குடிசைக்குள் திடீரென நுழைந்து சாப்பிடுதல் போன்ற நாடகங்களை மேற்கொண்டபோதும் மக்களின் விழிப்புணர்வால் காங்கிரஸால் சிறுபான்மை, தலித்து வாக்குகளை பெற இயலாமல் போய்விட்டது.
காங்கிரஸ் கட்சியின் தொடர் ஏமாற்றுப் புத்தியும், முஸ்லிம்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்துவதும் அவர்களின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதன் விளைவு சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர முடிந்தது. இதனை உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதியே கூறியிருந்தார்.
முஸ்லிம் வாக்காளர்களும், தலித்துகளும் கைவிட்ட நிலையில் தனது பழைய ஆஸ்தான வாக்காளர்களான பார்ப்பணர்களை கவரும் வகையில் முட்டாள்தனமான முடிவை காங்கிரஸ் மேற்கொண்டதன் விளைவே ராகுலின் பிராமணன் அறிவிப்பாகும்.
இதன் முன்னோட்டமாக டெல்லியில் அண்மையில் ராகுல்காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாதி ஆயுதம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல்காந்தி சட்டென “நான் ஒரு பிராமின்… அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்” என்று கூறியது கட்சியினரின் பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்தியின் இத்தகைய வெளிப்படையான ஒப்புதலால் காங்கிரஸ் கட்சியால் பிராமணர்களின் வாக்குகளைத் தக்க வைத்து அப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்ற கனவில் மூழ்கியிருக்கும் உ.பி மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஆசையில் மண் விழப்போவது நிச்சயம்.
உ.பியில் பிராமணர்களின் வாக்குகளை கவருவதற்காக நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மை சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை காங்கிரஸ் இழக்கப் போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராகுலின் பேச்சுக் குறித்து தற்பொழுது இணையதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் தந்தை பார்சி, அதைப்போல ராகுலின் தாய் ஒரு கிறிஸ்தவர் இந்நிலையில் அவர் எப்படி பிராமணன் என்று கூறலாம் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இன்னொரு தரப்பினரோ அவரது தாயார் சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவரல்லவா? என்று கேட்கின்றனர்.
ஆக மொத்தத்தில் காங்கிரஸ் தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொண்டுள்ளது என்பது மட்டும் உறுதி. ராகுலின் கருத்துக்கு ஏதேனும் விளக்கம் காங். தரப்பில் இருந்து விரைவில் வெளியாகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக