என் குழந்தையை கொலை செய்த என் கணவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் அவரைத் தூக்கிலிட வேண்டும். அவரது தண்டனை, அவரை போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்,'' என்று பெங்களூரில் தன் பச்சிளம் குழந்தையை பறிகொடுத்த தாய் ரேஷ்மா கதறினார்.
தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் வெறுப்புற்ற உமர் ஃபாரூக் என்பவர் அப்பச்சிளம் குழந்தையை அடித்து உதைத்து சிகரெட்டால் சூடுவைத்து சித்ரவதை செய்தார். சித்திரவதையால் அக்குழந்தை படுகாயமுற்றது. காயங்களுக்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பால் நேற்று
பரிதாபமாக இறந்தது.பேணி வளர்க்க வேண்டிய பெற்ற தந்தையே கொடூரமாக நடந்துகொண்டதால் அந்த சிசுவின் அகால மரணம் அனைவரையும் உலுக்கியுள்ளது. குழந்தையின் மரணத்தைத் தொடர்ந்து சித்திரவதை செய்த உமர் ஃபாரூக் கைது செய்யப்பட்டுள்ளர். உமர் ஃபாரூக் குடிபழக்கம் உடையவர் என்றும் கூறப்படுகிறது.
குழந்தையை கொடுமைப்படுத்தியதாக போடப்ப்பட்ட இந்த வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. சுமந்து பெற்ற மகவை பறி கொடுத்த ரேஷ்மா ""என் குழந்தையை கொலை செய்த என் கணவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அவரது தண்டனை, அவரை போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்'' என்று கூறி கதறி அழுதார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக