கடந்த சனிக்கிழமை பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம், இன்று மாலை பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க-வைச் சேர்ந்த 6 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை உடனடி பதவி நீக்கம் செய்தார்.
இதனையடுத்து சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரான டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் தற்போது 4 பாஸ் கட்சி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பதவி வகிக்கின்றனர்.
இதனிடையே இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காலிட், மந்திரி புசார் என்ற முறையில் தமது அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயன்றதற்காக 6 ஆட்சிக்குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது குறித்து மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவிடம் பேசிவிட்டதாக தெரிவித்தார்.
டான் ஶ்ரீ காலிட்டின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து பி.கெ.ஆர் மற்றும் ஜ.செ.க கட்சிகள், திடீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக