மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பா.ஜனதா 7 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் ஒரு தொகுதியிலும் வென்றது. குறிப்பாக பீகாரில் தேர்தல் நடைபெற்ற 10 தொகுதிகளில் 4 இடங்களை மட்டுமே பா.ஜனதா பிடித்தது. 6 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி வசம் வந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளையும் பா.ஜனதா இழந்தது. இவற்றில் 3 தொகுதிகள் ஏற்கனவே அக்கட்சி வசம் இருந்தவை. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
தங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி குறித்து நிதிஷ் குமார் கூறுகையில், “நரேந்திர மோடி அரசு மீது வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்திய இந்த வெற்றி காட்டுகிறது. பா.ஜனதாவின் வகுப்புவாத செயல்பாடுகளை தடுக்க இந்த கூட்டணியில் இடதுசாரிகளையும் சேர்க்க வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக