செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014

மத்திய ஆப்பிரிக்காவில் முதல் முஸ்லிம் பிரதமர்

மத்திய ஆப்பிரிக்காவில் முதல் முஸ்லிம் பிரதமராக முஹம்மது காமவுனை அதிபர் காதரின் ஸாம்பா பன்ஸா (Picture: President Catherine Samba) நியமித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மைக்கேல் ஜொட்டோடியாவின் ஆலோசகரும், அலுலக தலைவருமாக பதவி வகித்தவர் காமவ்ன். தற்போதைய பிரதமர் ஆந்த்ரே நாபாய்க்கேவுக்குபதிலாக காமவ்ன் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஸாம்பா பன்ஸாவின் கோரிக்கைக்கு இணங்க நாபாய்கே தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
பலாக்கா கிறிஸ்தவ கிளர்ச்சியாளர்களுக்கும், முஸ்லிம் ஸெலிக்காவிற்கும் இடையே பல மாதங்களாக தொடரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர கடந்த ஜூலை 23-ஆம் தேதி டெமோக்ரேடிக் ரிபப்ளிக் ஆஃப் கோங்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக