சனி, ஆகஸ்ட் 02, 2014

சிக்ஸ்பேக் லிஸ்டில் இனி அதர்வன்

திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வன், அண்மையில் இயக்குனர் பாலாவின் ‘பரதேசி’ படத்திற்கு பின் திரையுலகில் பலரின் பாராட்டை பெற்று வருகின்றார்.

அப்படத்தில் தமது திறமையான நடிப்பினை வெளிப்படுத்திய அதர்வன், விரைவில் ரவி அரசு இயக்கும் “ஈட்டி” படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தில் நல்ல கட்டுமஸ்தான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் தடகள வீரராக வலம் வரும் இவர், தற்போது சிக்ஸ்பேக் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் பட்டியலில் இணையும் இவர், விரைவில் வெளியாகவிருக்கும் ‘இரும்பு குதிரை’ படத்திலும் சிக்ஸ்பேக் தோற்றத்துடன் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக