சனி, ஆகஸ்ட் 02, 2014

குற்றாலம் மெயினருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதையடுத்து குற்றாலத்தில் இன்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்ய தொடங்கியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவு விழுந்தது.

இந்த நிலையில் இன்று காலை திடீரென மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் அதிகளவு விழுந்தது. இருந்தாலும் அங்கு தடை விதிக்கப்படவில்லை. மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்ற அருவிகளுக்கு குளிக்க சென்றனர்.

மெயினருவி அருகே சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக